கோவை மாணவி கின்னஸ் சாதனை! குவியும் பாராட்டுக்கள்!

0
140

கோவை மாவட்டத்தில் மாணவி ஒருவர் 13 மணி நேரத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கோவை மாவட்டம் உலியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா. இவர் ஒரு கல்லூரி மாணவி. 13 மணி நேரத்தில் சுமார் 6000 சதுர அடிக்கு ஓவியம் வரைவதற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் வரைந்த ஓவியத்தை கின்னஸ் அமைப்பு தற்போது அங்கீகரித்துள்ளது. இதனால் மாணவி மோனிஷா ரவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் தனக்கு ஆர்வம் அதிகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் கோவையில் உள்ள சங்கர அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு சுதந்திர தினம் அன்று கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற உலக சாதனை போட்டியில் கலந்து கொண்ட இவர் 13 மணி நேரத்தில் தனிநபராக 6057.92 சதுர அடி அளவில் தொடர் ஓவியம் வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இது பற்றி மோனிஷா ரவியிடம் கேட்ட பொழுது எனக்கு சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் என்பதாகவும் ஓவியக் கலையை வைத்து புது முயற்சியில் ஈடுபட்டு முட்டை ஓடுகளில் 50 தலைவர்களின் ஓவியங்களை ஒரு மணி நேரம் முப்பத்தி ஒரு நிமிடத்தில் வரைந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம் பெற்றேன் என்று அவர் கூறினார்.

இப்பொழுது 13 மணி நேரத்தில் 6057.92 சதுர அடி அளவில் ஓவியம் வரைந்து டூடுல் ஆர்ட் என்னும் ஓவியத்திற்கு உலக சாதனை படைத்துள்ளேன்.இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்த சாதனையை அடைந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறினார். பேராசிரியர்கள் பெற்றோர்கள் உறவினர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Previous articleஎகிறும் பெட்ரோல் டீசல் விலை! கவலையடைந்த வாகன ஓட்டிகள்!
Next articleகோயம்புத்தூர் மாவட்டம் புறக்கணிப்பா? சட்டசபையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!