மருத்துவர்களை காவு வாங்கும் நோய்த்தொற்று பரவல்! இந்திய மருத்துவ சங்கம் கடும் விரக்தி!

0
175

நோய்த்தொற்று பரவலின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலையில் மிக அதிக மருத்துவர்கள் பலியாகி இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கின்றது.
இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே வைத்திருப்பார்கள் பரவத்தொடங்கியது. அப்போது இருந்தே அந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். இருந்தாலும் அந்த நோய் தொற்றினை பெரிய அளவில் கட்டுப்படுத்த இயலவில்லை அதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமையால் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடையே வெகுவாக ஏற்படத் தொடங்கியது இதனால் பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஆரம்பித்தனர். அதன் காரணமாக, இந்தியாவில் வெகுவாக இந்த நோய்த்தொற்று பரவலின் தாக்கம் குறைந்தது.இந்த தொற்று பரவல் வெகுவாக குறைந்து வந்த சமயத்தில் திடீரென்று இந்த தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியது இதில் பல முக்கிய புள்ளிகள் உயிரிழந்தார்கள். முதல் அலையின் போது சாதாரண பொது மக்களை மட்டும் பலிவாங்கிய நோய்த்தொற்று ஆனால் தற்சமயம் இரண்டாவது அலையின் போது பல முக்கிய புள்ளிகளை பலிகொண்டது.

இந்த சூழ்நிலையில், நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு நிலவரத்தின் படி கடந்த 24 மணிநேரத்தில் 51 ஆயிரத்து 667 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. அதோடு ஒரே தினத்தில் 1329 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், இதுவரை இந்த தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 110 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல 2 கோடியே 91 லட்சத்து 28 ஆயிரத்து 667 பேர் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள் இவ்வாறான இக்கட்டான சூழலிலும் தொடர்ச்சியாக மருத்துவ பணியாளர்கள் நோய் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நோய் தொற்றின் இரண்டாவது அலையில் 776 மருத்துவர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று மருத்துவர் சங்கம் தெரிவித்திருக்கிறது. நோய்த்தொற்று முதல் அலையை விடவும், இரண்டாவது அறையில் மிக அதிகமான மருத்துவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். என்றும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கிறது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 115 பேர் இதனால் பலியாகி இருக்கிறார்கள் என்ற நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ஐம்பது மருத்துவர்கள் இந்த நோய் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

Previous articleமுதல்வரை நெகிழ வைத்த சிறுவன்! வியந்து போன உதயநிதி ஸ்டாலின்!
Next articleஉங்க PF பணம் எவ்வளவு இருக்குனு தெரிஞ்சுக்கணுமா? இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here