யூ – ட்யூப் சேனல் கொடுத்த கொரோனா நிதி! # பெருமை பெற்ற சிறப்பு!
இப்போதுள்ள இளைய தலைமுறையினர் பலர் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் பார்த்து வருகின்றனர். வருமானம் பார்க்கிறார்களோ? இல்லையோ? அவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தி தனி ரசிகர் பட்டாளங்களை சேர்த்து வைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். அந்த யூடியூப் சேனலின் மூலம் இந்தியாவில் பலரும் தங்களது சொந்த சேனலில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதில் முன்னணியில் உள்ள சேனலாக வில்லேஜ் குக்கிங் சேனல் திகழ்கிறது. இதில் மொத்தம் 5 பேர் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த சேனல் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட இவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார். அதன் மூலம் இந்திய அளவில் பிரபலமாக இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் உருவாகியுள்ளது. ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் இவர்களுடைய கிராம, மற்றும் வெகுளித்தனமான பேச்சு முறை மக்களுக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது.
இந்த சேனலை தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயியான சமையல்காரர்கள் குடும்பம் நடத்துகின்றது. இந்த சேனலை சின்ன வீரமங்கலம் என்பவர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கினார். மேலும் அவரது பேரக்குழந்தைகள் ஆன முருகேசன், தமிழ்ச்செல்வன், அய்யனார், முத்துமாணிக்கம், சுப்பிரமணியன் மற்றும் பெரிய தம்பியும் இடம்பெற்றுள்ளனர். இந்த சேனலில் சுப்ரமணியம் வணிகத்தில் எம்பில் மற்றும் முத்துமாணிக்கம் கேட்டரிங் படித்திருந்தாலும், அவர்கள் தங்களின் தாத்தாவிடமிருந்து சமையல் கற்றுக் கொண்ட, தாயின் வழிகாட்டலை மட்டுமே தற்போது வரை பின்பற்றுவதாக கூறினார்கள்.
தற்போது தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக ஒரு கோடி சந்தாதாரர்களை கடந்து வில்லேஜ் புக்கிங் சேனல் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளனர். இது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆகையால் பலரும் இந்த யூடியூப் சேனலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், தங்களது ட்விட்டர் தளத்தில் #வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற பதிவிட்டு வருகின்றனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. மேலும் தங்களுடைய வளர்ச்சி தொடங்கிய காலம் முதல் தற்போது எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளோம் என்பதையும் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். அதை பலரும் பகிர்ந்து இந்தக் யூடியூப் குழுவினருக்கு பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.