ரூ.187.67 கோடி கொடுத்த நிதி அமைச்சகம்! 4 வது பற்றாக்குறை நிதி!

0
117
Finance Ministry pays Rs 187.67 crore 4th Deficit Funds!
Finance Ministry pays Rs 187.67 crore 4th Deficit Funds!

ரூ.187.67 கோடி கொடுத்த நிதி அமைச்சகம்!  4 வது பற்றாக்குறை நிதி!

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதி குழுமம் அப்போது வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாக காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறைக்கான நிதியை வழங்குவதற்கு நிதி குழுமம் பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி தேவையை சமாளிக்கும் அளவு இருக்கும்.

அதன்படி 15வது நிதிக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது. இதில் நான்காவதாக தமிழகம் உட்பட 17 மாநிலங்களுக்கு ரூபாய் 9,871 கோடியை வருவாய் பற்றாக்குறை நிதியாக நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

இதில் தமிழகத்துக்கு நான்காவது தவனையாக மட்டும் ரூபாய் 1 83.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும் 15வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ரூ.118452 கோடியில் தமிழகம், ஆந்திரம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்ரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 17 மாநிலங்களுக்கும் இதுவரை நான்கு தவணைகளையும் சேர்த்து ரூ.39,484 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 தவணைகளில் எல்லாத்தையும் விடுவிக்கும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!
Next articleதமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே?