10 வருடங்களுக்கு பின்பு கை கோர்க்கும் பிரபல நடிகை!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!  

Photo of author

By Preethi

10 வருடங்களுக்கு பின்பு கை கோர்க்கும் பிரபல நடிகை!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!  

Preethi

Famous actress to join hands after 10 years !! Fans celebration !!

10 வருடங்களுக்கு பின்பு கை கோர்க்கும் பிரபல நடிகை!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

தமிழ் சினிமா அறிமுகமான சிறிது காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரின் திரையுலக பயணத்தில் பல்வேறு விதமான வேடங்களில் நடித்து உள்ளார்.

தற்போது ஹன்சிகா `மஹா’ என்ற திரைப்படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறப்பிடத்தக்கதாகும். இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஹன்சிகா, மித்ரன் ஜவஹர் இயக்கும் திரைப்படத்தில், பத்து ஆண்டுகளுக்கு பின் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களாம், அதில் ஒருவர் தான்  ஹன்சிகா  என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானி  கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.