வரலாற்று சாதனை படைக்கும் ஷிகர் தவான்!

Photo of author

By Sakthi

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தற்போது கேப்டனாக களமிறங்கி இருக்கின்ற ஷிகர் தவான் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய ஏ அணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் விளையாடி வருவதன் காரணமாக, இந்திய அணியின் 20 வீரர்கள் கொண்ட அணியில் ஷிகர் தவான் தலைமையில் இலங்கை நாட்டிற்கு அனுப்பியிருக்கிறது பிசிசிஐ.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை மாதம் 13ஆம் தேதி அதாவது நேற்று முதல் ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதாக இருந்தது. இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 16ஆம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் நடைபெறுவதாக முதலில் அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு டி20 போட்டிகள் ஜூலை மாதம் 21ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி 25-ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிகள் எல்லாம் குழுவில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இருந்தாலும் இலங்கை அணியில் அந்த அணியின் மட்டை வீச்சு பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் உள்ளிட்ட இருவருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த போட்டி தொடர் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஜூலை மாதம் 13ஆம் தேதி அதாவது நேற்றையதினம் ஆரம்பிக்க இருந்த ஒருநாள் போட்டிகள் ஜூலை மாதம் 18ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 5 தினங்களுக்கு தொடர் முழுமையாக தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 18ஆம் தேதி ஆரம்பமாகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 20ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 23ஆம் தேதியும், நடைபெற இருக்கிறது. அதேபோல முதல் டி20 போட்டி ஜூலை மாதம் 25-ம் தேதியும் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. 2வது டி20 போட்டி ஜூலை மாதம் 27ஆம் தேதியும் மூன்றாவது டி20 போட்டி ஜூலை மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல புவனேஸ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அணியில் இருக்கும் வீரர்கள் வருமாறு ஷிகர் தவான், ப்ரித்விஷா,படிக்கல், ருத்ராஜ் சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதீஸ ரானா, சஞ்சு சாம்சன், ராகுல் சஹர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா, உள்ளிட்ட வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள் இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது பலரும் அறிந்ததுதான்.

இந்த தொடரின் மூலமாக இந்திய அணிக்கு மிக அதிக வயதில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் வீரர் என்ற பெயரை ஷிகர் தவான் பெற்றிருக்கிறார். அதாவது இது வரையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு வயதான நபர் ஒருவர் இந்திய ஒருநாள் அணி கேப்டனாக பொறுப்பேற்றது இல்லை என்று சொல்லப்படுகிறது. போட்டி ஆரம்பிக்கும் நாளான எதிர்வரும் 18ஆம் தேதி ஷிகர் தவான் வயது 35 ஆண்டுகள் 225 நாட்கள் இதன் மூலமாக 36 ஆண்டுகால சாதனையை முறியடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன் 1984ஆம் வருடம் இந்தியாவின் மொகிந்தர் அமர்நாத் பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டனாக அறிமுகமான சமயத்தில் அவருக்கு வயது 34 என்று சொல்லப்படுகிறது. தற்சமயம் அதனை தவான் முறியடித்து இருக்கின்றார்.