இங்கே மீண்டும் தலை காட்டும் தொற்று! அந்த நாடு என்ன திட்டம் தீட்டி வருகிறது!

0
113
Here's the head-scratching infection again! What a plan that country is planning!
Here's the head-scratching infection again! What a plan that country is planning!

இங்கே மீண்டும் தலை காட்டும் தொற்று! அந்த நாடு என்ன திட்டம் தீட்டி வருகிறது!

உலகிலேயே கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்தது. ஆனால் சீனாவோ அந்த நாட்டு மக்களுக்கு ஊரடங்கு அறிவித்து, அந்த  மூன்று மாதங்களில் கோரோனாவை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆனால்  இந்தியா உட்பட பல நாடுகள் இன்னும் கொரோனா தொற்றுடன் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட, சீனா பயங்கர கட்டுப்பாடுகளுடன் கொரோனாவைக் கட்டுக்குள் வைத்து இருந்தது.

பல நாடுகள் கோரோனவை சீனாவின் சதி வேலை என வஞ்சம் கூறி வந்த நிலையில் கூட, அங்கு எந்த ஒரு தோற்று அறிகுறிகளும் தெரியவில்லை. இதன் காரணமாக பல உலக நாடுகள் சீனாவுடன் பல தரப்பட்ட வாக்குவாதங்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத் தக்கது. இதனிடையே வொவால்கள் மூலம் கொரோனா தோற்று பரவுவதாகவும் பல தகவல்கள் வந்த நிலையில், சீனாவில் மர்மம் உள்ளது என்றே பல நாடுகள் சொல்லி வருகின்றன.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலை காட்டத் துவங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சீனாவில் புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 27 பேருக்குத் தொற்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீனா சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 22 பேருக்கு அறிகுறி இல்லாத கொரானா தொற்று இருப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 92095 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் அங்கு இதுவரை 4636 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Previous articleமாணவர்களுக்கு இன்பச்செய்தி! பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தற்காலிகமாக ரத்து!
Next articleகண்ணம்மா செய்த காரியம்!! வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்!!