ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி!

0
192
Achievement in the selection of 5 sisters from the same family! Officer who tweeted!
Achievement in the selection of 5 sisters from the same family! Officer who tweeted!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி!

ராஜஸ்தான் மாவட்டத்தில் பொது சேவை ஆணையம் ஆர்.பி.எஸ்.சி ராஜஸ்தான் நிர்வாக சேவை 2018ம் ஆண்டின் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் ஜுன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் ஷர்மா இரண்டாம் இடத்தையும், ஜெய்ப்பூரை சேர்ந்த சிவாஜி கண்டால் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தம் 2023 பேர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இப்போது மாநிலத்தின் பல்வேறு துறைகளிலும் நியமிக்கப்படுவார்கள். முதலிடம் பிடித்தவர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த தேர்வில் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மூன்று மகள்கள் வெற்றி பெற்று உள்ளனர்.  ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனுக்கு ஐந்து மகள்கள் அதில் ஏற்கனவே ரோமா மற்றும் மஞ்சு ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ளனர். தற்போது மற்ற மூன்று மகள்கள் அன்ஷு, ரீது மற்றும் சுமன் இவர்களும் இதே தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.

இது குறித்து பர்வீன் கஸ்வான் என்ற ஐபிஎஸ் அதிகாரி ட்விட் செய்துள்ளார். அதில் இது ஒரு நல்ல செய்தி அன்ஷு,ரீது மற்றும் சுமன் ஆகியோர் ராஜஸ்தானின் ஹனுமங்கர் பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் என்றும், மூவரும் ஒன்றாக ஆர்.ஏ.எஸ். தேர்வில் தேர்வு  செய்யப்பட்டனர். விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மகள்கள் இப்போது ஆர்.ஏ.எஸ் அதிகாரிகள் என்று ட்விட் செய்துள்ளார்.

இந்த ட்வீட் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்றுள்ளது. மற்றும் பலர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/ParveenKaswan/status/1415252995609010178/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1415252995609010178%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2F2021%2F07%2F15120333%2F3-Sisters-Cracked-Rajasthan-Administrative-Service.vpf

Previous articleஇன்போசிஸ் ன் புதிய திட்டம்!! ஐடி கம்பனிகள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வைக்க ஆர்வம்!!
Next articleநட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!