மூன்று தலைமுறை பாவங்கள் அடியோடு அழிய செவ்வாய்க்கிழமைகளில் இதைச் செய்யுங்கள்!

0
305

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் நிச்சயமாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கும் அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் வாழ்க்கையின் முன்னேற வேண்டும் என்று கஷ்டப்பட்டு முன்னேறினாலும் நாம் முன்னேற இயலாமல் தடை வந்துகொண்டே இருக்கும். அதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் நம்மை பின்தொடர்வது தான் என்று சொல்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும், போன்ற எண்ணற்ற கனவுகள் மனிதர்களுக்கு இருக்கும்.

அதேபோல கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் பலர் நினைப்பார்கள். இருந்தாலும் அதனை நிறைவேற விடாமல் பல தடைகள் வந்து கொண்டே இருக்கும். நம்முடைய முன்னோர்கள் தலைமுறையும் கஷ்டத்தில் தான் இருந்திருக்கும், நாமும் கஷ்டத்தில் தான் இருந்திருப்போம், நம்முடைய அடுத்த தலைமுறையையும் நம்மால் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல இயலாத அளவிற்கு சூழ்நிலை ஏற்படும்.

இதற்கு என்னதான் செய்யலாம் செய்த பாவங்கள் நீங்குவதற்கு முன்னேற்ற தடையை அகற்றுவதற்கு எதிர்மறை ஆற்றலை எதிர்த்து போராடுவதற்கு ஏற்றி வழிபாடு நமக்கு கைகொடுக்கும் என சொல்கிறார்கள். யட்சிணி தேவி ஒரு நல்ல தேவதை கேட்ட வரங்களை கொடுப்பதில் இந்த யட்சிணி தேவதை முதலிடம் பிடித்து இருக்கின்றார். நம்மில் பல பேர் இந்த தேவதையின் வழிபாட்டை பற்றி கேள்விப்பட்டு இருக்க வாய்ப்பில்லை கேட்ட வரங்களை அள்ளித் தரக்கூடிய இந்த யட்சிணி தேவதை வழிபாட்டை நாம் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் லட்சுமி தேவியை மனதார நினைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும் எப்போதும் போல பூஜை அறையை அலங்காரம் செய்து கொண்டு உங்களுடைய இல்லத்தில் ஒரு சிறிய தாம்புல தட்டில் மூன்று அகல் விளக்குகளை வைத்து, அதில் ஒன்றில் நல்லெண்ணெய் மற்றொன்றில் தேங்காய் எண்ணெய் இன்னும் ஒரு விளக்கில் சுத்தமான நெய் உள்ளிட்டவற்றை ஊற்றி திரி போட்டு ஏற்றி தேவியை நினைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

இந்த தீபமானது செவ்வாய்க்கிழமை ஆறு மணியிலிருந்து ஏழு முப்பது மணி வரையில் உங்களுடைய வீட்டில் எரிய வேண்டும்.இவ்வாறு அந்த விளக்குகள் ஒளிரும் போது யட்சிணி தேவி இடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது நிறைவேறும். உங்களுடைய குறிக்கோள் சிறிய குறிக்கோளாக இருந்தால் அது மூன்று வாரங்களில் நிறைவேறும் அதுவே பெரிய குறிக்கோளாக இருந்தால் அதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வர வேண்டும்.

Previous articleஇலங்கை அணிக்கு எதிராக புதிய சாதனையைப் படைக்குமா இந்திய அணி!
Next articleஒரே ரேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய கூடாது!! கூட்டுறவு துறை அதிரடி!!