தமிழக அரசு அறிவித்த முக்கிய திட்டத்தை பற்றி கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்! அதிர்ச்சியில் தமிழக அரசு!

0
151

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியானது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தாலும் இந்த ஆயிரம் ரூபாய் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்று கேள்வி அனைத்து தரப்பு மக்களிடமும் இருக்கிறது. இந்த தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர்களும் தெரிவித்து தான் வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் இன்று வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் இல்லத்தரசிகளின் பொருளாதார பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்களுடைய தியாகமும் உழைப்பும் மற்றும் அர்ப்பணிப்பும் ஈடு செய்ய இயலாதது. அதற்கு ஏற்ற அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த ஒரு அரசியல் கட்சி என்றால் அது மக்கள் நீதி மையம் தான் என்று தெரிவித்திருக்கிறார்.

குடும்பத் தலைவிகளின் பொருளாதாரத்திற்காக கணவனை சார்ந்து இருக்கும் சூழலே நிலவி வருகிறது. தங்களுடைய தனிப்பட்ட ஆர்வம் மற்றும் கணவருக்காக அவர்களால் செலவு செய்ய இயலாத நிலையில் தான் அனேக பெண்மணிகள் இருக்கிறார்கள். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற மக்கள் நீதி மையத்தின் யோசனை பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இல்லத்தை கவனித்துக்கொள்ளும் குடும்பத்தலைவியின் உழைப்பின் மதிப்பு கணவர்களுடைய அலுவலக வேலை மதிப்பை விடவும் எப்போதும் குறைந்தது அல்ல என்று உச்சநீதிமன்றமே ஒரு வழக்கின் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மையத்தின் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மற்ற அரசியல் கட்சிகளும் இதனை தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் இணைத்துக் கொண்டார்கள். தமிழகத்தில் ஆரம்பித்து அசாம் சட்டசபை தேர்தல் வரையில் இந்த திட்டம் எதிரொலித்தது என்று தெரிவித்திருக்கிறார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக கொடுக்கப்படும் என்று அறிவித்தது இன்றைய பண வீக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது மிக குறைந்த தொகை. ஆனாலும் இந்த சிறிய தொகையாவது இல்லத்தரசிகளுக்கு கிடைக்கிறதே என்று தான் கருத வேண்டிய நிலையில், நாம் இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கின்றார் கமல்ஹாசன்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது தொடர்பான அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெறும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் அமர்ந்து 75 தினங்கள் ஆகியும் இது தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது. இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவது ஏற்புடையது இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார். இந்த திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார்.

Previous articleநிஃப்டி, சென்செக்ஸ் நிலவரம் லைவ்!! பஜாஜ் நிதி, டெக் மஹிந்திரா டாப் கெயினர்ஸ்!!
Next articleவிஜய் டிவியின் டிஆர்பியை குறைத்த சன் டிவியின் புதிய சீரியல்!! என்ன சீரியல் தெரியுமா??