தீபக் சாகரின் வாழ்க்கையையே திசை திருப்ப முயற்சி செய்த முக்கிய நபர்!

Photo of author

By Sakthi

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென்று தீபக் சா்கரை ஹீரோவாக நினைத்திருக்கிறார்கள் ஆனால் அவருடைய வாழ்க்கையையே ஒருவர் திசைதிருப்ப பார்த்து இருக்கின்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் பரிபோன பின்னரும் நங்கூரம் போல நிலைத்து கடைசி வரையில் நின்று அணியை வெற்றி பெற வைத்தவர் தீபக் சாகர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்காக அல்லாடிக்கொண்டு இருக்க ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கின்றார் தீபக் சாஹர்.

அவர் ஏடாகூடமாக சுற்றி பந்து சிக்ஸர்களுக்கு பறந்து வெற்றி பெற்றிருந்தால் கூட அதிர்ஷ்டத்தில் வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம். ஆனால் முழுவதுமாக 82 பந்துகளை சந்தித்து 69 ரன்களை எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் ஒரு ஃபர்ஸ்ட் பேட்ஸ்மேன் என்று சொல்லலாம் ஒரு கைதேர்ந்த கிரிக்கெட் வீரரைப் போல தீபக் சாகரின் அணுகுமுறை இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஒரு சில ஷாட்கள் அவருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது உண்மைதான். ஆனாலும் அதுதான் இங்கே நாம் கவனிக்க கூடிய விஷயம் இந்த சூழ்நிலையில் தீபக் சாகரை கிரிக்கெட்டை விட்டு வேறு தொழில் செய்தால் உன் வாழ்க்கை நல்லது என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பல் சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாந்த் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இருக்கின்ற வலைதள பதிவில் திவாகரின் குறைவான உயரத்தை குறிப்பிட்டு ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமி சேர்க்க மறுத்த முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் அவரை வேறு தொழில் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தார். அப்போது சாப்பல் ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்தார். இப்போது அதே சாகர் தன் தன்னுடைய திறமையைக் கொண்டு வந்து தனியாக இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார். இந்த கதையின் மூலமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்களை நம்புங்கள் வெளிநாட்டு பயிற்சியாளர்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நெத்தியடி கொடுத்திருக்கின்றார்.