கடவுளை நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு வேதங்களின் வாக்கு என்று சொல்லப்படுகிறது. நன்மைக்கும், தீமைக்கும் ஆன போராட்ட சமயத்தில் நல்லவர்களுக்கு தெய்வமே என்றும் துணையாக இருந்திருக்கிறது. அப்படி தன்னுடைய நித்திய ஸ்வரூபத்தை உணர்ந்துகொண்ட தன்னுடைய பக்தனான பிரகலாதனை தெரிவித்த தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், என்ற சத்திய வாக்கை நிரூபிப்பதற்காக அந்தத் தூணைப் பிளந்து கொண்டு வெளியே வந்து அரக்கர் தலைவனான இரணியகசிபுவை வதம் செய்த மகாவிஷ்ணுவின் அவதாரம் நரசிம்ம அவதாரம். அப்படிப்பட்ட நரசிம்மரின் ஒரு அதிசயமான கோவிலைப் பற்றி இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரத்திற்கு சற்று தொலைவில் இருக்கும் மங்களகிரி என்ற சிறிய மலை பகுதியில் அமைந்திருக்கிறது இந்த பானக நரசிம்மர் சுவாமி கோவில். இந்த கோவில் மிகவும் பழமையானது என்றும் தெரிவிக்கப்படுகிறது. விஜயநகரப் பேரரசு மன்னர்கள் அதிலும் குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் இந்த கோவிலுக்கு வருகை தந்ததையும், இந்த கோவிலுக்கு அவர் செய்த திருப்பணிகளையும், இந்த கோவிலில் இருக்கின்ற கல்வெட்டில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த கோவிலுக்கு பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த வங்காள துறவியான சைதன்ய மகாபிரபு வருகை தந்திருக்கின்றார். அவ்வாறு அவர் வருகை தந்த சமயத்தில் அவர் பாத சுவடுகள் பதிந்த ஒரு இடத்தை இன்றும் பூஜித்து வருகிறார்கள். இந்த கோவிலின் விசேஷமே இந்த கோவிலின் தெய்வமான நரசிம்ம சுவாமியின் மூலவர் சிலை பக்தர்கள் அளிக்கும் வெல்லத்தால் செய்த நீர் பணத்தை அப்படியே அருந்துவது தான். இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் வதம் செய்த பின்னர் கோபம் தணியாத நரசிம்மருக்கு வெல்ல பானத்தை தந்து தேவர்கள் அவரது கோபத்தை தணித்து இருக்கிறார்கள்.அன்றிலிருந்து இந்த நடைமுறை பின்பற்ற படுவதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த மலையிலேயே சுயம்புவாக அமைந்த நரசிம்ம சுவாமியின் மூலவர் சிலையில் வாயில் வெல்லம், ஏலக்காய், போன்ற பொருட்கள் கலந்த பானகத்தை ஊற்றும் சமயத்தில் ஒரு மனிதன் நீர் அருந்துவது போல சத்தம் ஏற்படுவதை இங்கே வருபவர்கள் அனைவரும் கேட்க இயலுகிறது என்று சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு பக்தரின் பணத்தை முழுமையாக அருந்தாமல் மீதி பானகத்தை அவர்களுக்கு பிரசாதமாக நரசிம்மர் வெளியே துப்பி விடும் ஆச்சரியமும் எங்கே நடப்பதாக சொல்லப்படுகிறது இது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று கொண்டே வரும் ஒரு தெய்வீக நிகழ்வு என்றும் தெரிகிறது.