திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் பவித்ரோட்சவம் மூன்று தினங்கள் நடைபெறுகிறது. வருடம் முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகிறது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் என்று எல்லோரும் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோட்சவம் நடத்தப்படுகின்றது.
பவித்ர உற்சவத்தின் முதல் நாளான 21ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து பத்து மணி வரையில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரர் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் ,பால் தயிர் தேன் இளநீர் உள்ளிட்ட திறமைகளுடன் ஸ்நபன திருமஞ்சனம் மாலை கலச பூஜை ஹோமம் பவித்ரா பிரதிஷ்டை நடந்திருக்கிறது.
பவித்ர உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர் சேகர், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.