மகாபாரதத்தில் வரும் கர்ணன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கொடுத்து பழக்கப்பட்டவன் கர்ணன் யாரிடமும் எதையும் கேட்டு வாங்கியது இல்லை. போர்க்களத்தில் அர்ஜுனனால் விழுத்தப்பட்டு உயிர் மட்டும் இருந்த சமயத்தில் கர்ணனுக்கு மகாவிஷ்ணு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டியிருக்கின்றார்.
அந்த சமயத்தில் கூட கர்ணன் விஷ்ணுவிடம் எதுவும் கேட்டு வாங்கவில்லை. இறைவனை உனக்கு ஏதாவது வரம் கொடுக்க நினைக்கின்றேன் கேள் என்று தெரிவித்த பிறகுதான் ஒரு கோரிக்கையை இறைவனிடம் வைத்திருக்கிறான் கர்ணன். அது உன் திருக்காட்சியை கண்ட பின்னர் எனக்கு இனி பிறப்பு இல்லை என நான் அறிவேன் ஒரு வேளை நான் மீண்டும் பிறக்க நேர்ந்தால் அந்த பிறவியிலும் என்னிடம் இது வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனதை தரவேண்டும் என்று கேட்டான் கர்ணன்.
இப்படிப்பட்ட கர்ணன் ஒரே ஒருவரிடம் மற்றும் எனக்கு இதை தாருங்கள் என்று கேட்டு பெற்றான். அந்த நபர் கர்ணனின் தாய் குந்திதேவி.
கர்ணன் தன்னுடைய மகன் என்று தெரிந்தவுடன் அவனை பார்க்க சென்றார் குந்திதேவி. கர்ணனை ஆரத்தழுவி கண்ணீர் விட்டவர் அதன்பின்னர் கண்ணன் தெரிவித்தபடி கர்ணனிடம் இரண்டு வரங்களை வாங்கிக்கொண்டார் 1 அர்ஜுனனைத் தவிர பாண்டவர்களில் வேறு யாரையும் கொல்லக் கூடாது என்பது இன்னொன்று அர்ஜுனன் மீது விடும் நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் பிரயோகிக்க கூடாது என்பது.
கர்ணன் முகத்தில் சோகப் புன்னகை ஏறத்தொடங்கியது. தாய் தன் மீதான பாசத்தில் வந்திருப்பதாக முதலில் கர்ணன் நினைத்திருந்தான். ஆனால் அவர் பாண்டவர்களின் மீதான பாசத்தையும் தன்னுடன் சுமந்து வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டான் கர்ணன்.
உடனடியாக தாய் கேட்ட வரங்களைக் கொடுத்து விட்டான். அதுவரையில் யாரிடமும் எதுவும் கேட்காத கர்ணன் தன் தாயை நோக்கி தாயே எனக்கு இரண்டு வரங்களை கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறான். நான் உங்கள் மகன் என்பதை பாண்டவர்களில் மற்றவர்களுக்கு இப்போது நீங்கள் தெரிவிக்க கூடாது. நான் அவர்களின் சகோதரன் என்று தெரிந்தால் அவர்கள் என்னுடன் சண்டையிட தயக்கம் காட்டுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் கர்ணன்.
அடுத்த வரம் நான் பிறந்த சமயத்தில் அதோடு வளர்ந்த சமயத்திலும் கூட உங்களுடைய மடியில் என்னை தாங்கி கொள்ளவில்லை. ஒருவேளை நான் இந்த போரில் இறந்து போனால் நீங்கள் என்னை போர்க்களம் வந்து சந்திக்க வரவேண்டும். அங்கு வந்து என்னை உங்கள் மடியில் சாய்த்து கொண்டு நான் பிறந்த கதையையும், வளர்ந்த கதையும் என்னுடைய சிறப்பையும், சொல்லி அழ வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இரண்டு வரத்திற்கும் குந்திதேவி சம்மதித்துவிட்டார். குருச்சேத்திரப் போரின் 16-வது நாளில் கர்ணன் இறந்தார். அந்த சமயத்தில் போர் களத்திற்கு வந்த குந்திதேவி கர்ணனை தன்னுடைய மடியில் கிடத்தி அவன் புகழ் பாடி அழுதாள் அந்த சமயத்தில் முதன்முதலாக ஒப்பாரி (இறந்தவரின் புகழைப் பாடி அழுவது) பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.