மருத்துவ இட ஒதுக்கீடு: ஓ பி சி-க்கு 27% இட ஒதுக்கீடு!! மத்திய அரசு முடிவு!!
மத்திய அரசு, அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு ஓபிசி பிரிவினருக்கு 27% வழங்க முடிவு செய்துள்ளது. மருத்துவ படிப்பிற்காக அகில இந்திய அளவிலான இட ஒதுக்கீடானது தமிழகத்தின் எம் பி பி எஸ், பி டி எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விசாரணையின் பொது நீதிமன்றம் எப்போது இந்த இட ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு கூறியதாவது, கடந்த திங்கட்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் தற்போது அறிவிப்பாக வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
அந்த அறிவிப்பின் படி, மத்திய அரசு எம் பி பி எஸ், எம் டி எம் எஸ், பி டி எஸ், எம் டி எஸ், டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து உள்ளது. அகில இந்திய இட ஒதுக்கீடானது மாநில அரசு நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதமும் நடப்பு ஆண்டிலேயே மருத்துவ இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.