இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா?

Photo of author

By Hasini

இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா?

Hasini

Is it such a high road? Is it only in India?

இவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா?

லடாக்கில் உள்ள மிக உயரமான சாலை 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக உயரமான சாலை கொண்ட நாடு என்ற பெருமையை பொலீவியாவிடம் இருந்து இப்போது தட்டிப்பறித்து இருக்கிறது இந்தியா. விமானம் பறக்கும் உயரத்தில் பாதி அளவுக்கு சாலையா? என்று வியப்பாக இருக்கிறதல்லவா. ஆம் இது நிஜம் தான். ஒரு கமர்ஷியல் விமானம் பறக்கும் உயரத்தின் பாதி அளவு உயரத்துக்கு இந்திய எல்லையின் சாலைகள் நிறுவனம் லடாக்கில் சாலை அமைப்பு அமைத்து வியப்பை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் இந்த வகையில் பொலிவியாவின் முந்திய சாதனையையும் இந்தியா முறியடித்துள்ளது. அதில் நாம் பெருமை அடையத்தான் வேண்டும். கிழக்கு லடாக்கின் உம்லிங்கா பாஸ் எனும் பகுதியில் 19300 அடி உயரத்தில் 52 கிலோ மீட்டர் நீள தார் சாலையை இந்திய எல்லை சாலைகள் சாலைகளின் நிறுவனம் கட்டமைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிக உயரிய சிகரமாக எவரெஸ்ட் அடிவாரத்தில் அமைந்துள்ள முகாம்களின் உயரத்தை காட்டிலும் இந்த உம்லிங்கா பாஸ் சாலை உயரம் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 17598 அடி உயரத்திலும், திபத்தில் உள்ள வடக்கு அடிவார முகாம் 16900 அடி உயரத்திலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய கமர்சியல் விமானம் சாதாரணமாக 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்.

ஆனால் இப்போது உண்மையானது இந்த விமானம் பறக்கும் உயரத்தை காட்டிலும் கூடுதலாக அதாவது 19300 அடி உயரத்தில் அமையப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். தென்னிந்தியாவின் நீளமான பாலம் முன்னதாக பொலிவியா நாட்டின் 18953 அடி உயரத்தில்,  uturuncu எரிமலைக்கு செல்லும் சாலை ஆனது உலகின் உயரமான சாலை என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த பெருமையை லடாக்கின் உம்லிங்கா பாஸ் சாலை தட்டிப் பறித்துள்ளது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உம்லிங்கா பாஸ் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்ற காத்திருக்கிறது. லே  பகுதியிலிருந்து chisumle மற்றும் Demchok பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த 52 கிலோ மீட்டர் சாலை புதிய வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த சாலையின் மூலம் சுற்றுலாவும், சமூக பொருளாதாரமும் உயரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் குளிர் காலங்களில் -40 டிகிரி குறைவில்  வெப்பநிலை சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளது.

அப்படி ஒரு சவாலான சூழலில் இந்திய எல்லை சாலைகள் நிறுவனத்தின் ஊழியர்கள் இந்த சாலை அமைத்து இருப்பது, அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம்தான்  என்று நாம் சொல்லியாக வேண்டும்.