கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி சென்ற உறவினர்கள்!! அவதிப்படும் மக்கள்!!
பழங்குடியின கிராம மக்கள் வசிக்கும் கிராமங்களை பெரிதும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அங்கு சரியான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற பல வசதிகள் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர காலங்களில் கூட தங்களின் உயிரை காப்பாற்ற பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி உள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி 12 கிலோ மீட்டர் தூரம் வரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் சுமந்து சென்றனர். ஆந்திர மாநிலம் ஒடிசா எல்லையில் அமைந்துள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராம பகுதிகளில் சாலை வசதிகள் கூட இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் தோகாபாடு கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சந்திரபாபுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் தொட்டில் கட்டி சந்திரபாமவை வனப்பகுதி வழியாக 12 கிலோமீட்டர் தூரம் வரை சுமந்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து உள்ளனர். சரியான சாலை வசதி இல்லாமல் அந்த கிராம பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.