டோக்கியோ ஒலிம்பிக்: ஆண்கள் ஹாக்கி அணி சாதனை!! 41 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை!! குவியும் பாராட்டு!!
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியானது கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது வீதியில் இதில் இந்தியாவிலிருந்து 125 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு டோக்கியோவில் அனுப்பி வைக்கப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை மூன்று பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சாவுன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இந்த ஆண்டின் இந்தியாவிற்கான முதல் பதக்கம் ஆகும். மேலும் பேட்மிட்டன் போட்டியில் பிவி சிந்து இந்தியாவிற்கு இரண்டாவது பழக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றார். மேலும் மூன்றாவது பழக்கமாக பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த வரிசையில் நான்காவது பதக்கத்தை ஆண்கள் ஆக்கி அணியினர் வென்றுள்ளனர். ஒலிம்பிக்கில் நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்க திற்கான போட்டி இன்று நடைபெற்றது இதில் இந்தியாவை சேர்ந்த ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை சேர்ந்த ஆண்கள் ஹாக்கி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 54 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது கடைசியாக 1980 நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதக்கம் வென்றிருக்கிறது.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 4-வது பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்களுக்கு நாட்டின் தலைவர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் இந்த வெற்றியை ஹாக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் போவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பதக்கம் வென்ற இந்த நாள் ஒவ்வொரு இந்தியனின் நினைவிலும் குறைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். ஆண்கள் ஹாக்கி அணி வெற்றியால் ஒட்டுமொத்த தேசமே பெருமிதம் கொள்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.