நூலிழையில் பறிபோன பதக்கம்! கண்ணீர் விட்டு கதறிய இந்திய வீராங்கனைகள்!

0
125

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டியில் லீக் ஆட்டங்களில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி முதல் மூன்று போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பின்னர் மீண்டெழுந்த இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அயர்லாந்து நாட்டை 1-0 என்ற கணக்கிலும் தென்ஆப்ரிக்க அணியை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

கால் இறுதி போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி. தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது இந்த அரையிறுதிப் போட்டி. ஆம் அர்ஜெண்டினாவிடம் ஒன்றிற்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வெல்வதற்கான போட்டியின் இரண்டாவது கால் பகுதி வரையில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. குர்ஜித் கவுர் இரண்டு கோல்களை அடித்தார் அதேபோல வந்தனா ஒரு கோலை அடித்தார்.

மூன்றாவது காலிறுதி சுற்றில் பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்தது 3-3 என்று சமன் செய்தது. இந்தியாவிற்கு இரண்டு பெனால்டி வாய்ப்பு கிடைத்தும் கோல் அடிக்க இயலவில்லை. அதேநேரம் பிரிட்டன் அணியை கோல் அடிக்க விடாமல் நம்முடைய வீராங்கனைகள் சிறப்பாக ஆடினார்கள்.

இந்த நிலையில், வெற்றியை நிர்ணயம் செய்யும் கடைசி பதினைந்து நிமிடங்களில் இந்தியாவின் முக்கிய வீராங்கனை மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. ஒரு வீராங்கனை இல்லாமல் இந்திய அணி விளையாடியது. இதனை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட பிரிட்டன் அடுத்தடுத்து பெனால்டி வாய்ப்புகளை உண்டாக்கி மிகவும் சுறுசுறுப்பாக விளையாடியது. அதிலும் ஒரு பெனால்டி கார்னர் மூலமாக ஒரு கோல் அடித்து நான்கிற்கு மூன்று என்ற கணக்கில் முன்னிலை அடைந்தது.

ஆட்டத்தின் கடைசி 6 நிமிடங்களில் மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வீராங்கனை மறுபடியும் இந்திய அணியில் சேர்ந்தார். கடைசி நிமிடங்களில் பிரிட்டன் அணி மிக சிறப்பாக விளையாடியது கடைசியில் நான்கிற்கு மூன்று என்ற கணக்கில் பிரிட்டன் அணி வெற்றி பெற்றது. தோல்வியை தாண்டியும் இவ்வளவு தூரம் போராடி பதக்கம் வெல்ல இயலாத ஆற்றாமை காரணமாக, இந்திய அணியின் வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

Previous articleஇன்றைய பங்கு சந்தை!! பங்குகள் உயர்வு!! சரிவில்- இன்போசிஸ், TCS!!
Next articleபிக் பாஸ் சீசன் 5ல் யார் கலந்து கொள்ள போறாங்க தெரியுமா!! இதுவரை யாருமே எதிர்பாராத ஒருவர் தான்!!