ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் திருமணம் நிச்சயமாகி அதன் பின்னர் திடீரென்று திருமணம் நின்று போகும். அல்லது 2 வீட்டினரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய பேச்சு வார்த்தை நடைபெற்று திடீரென ஏதாவது ஒரு பிரச்சனை மற்றும் காரணத்தால், திருமணம் தள்ளிப்போகும் திருமண தேதி குறித்த பின்னர் இரு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டு திருமணம் நிற்பது, அதோடு திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவது போன்றவை நிகழும்.
அதோடு திருமணம் நடந்தாலும் கூட திருமணத்திற்கு பின்னர் தம்பதிகளில் யாருக்காவது ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்படுவது, தீராத வியாதி காரணமாக, வாழ்நாள் முழுவதும் அவர் இருப்பது இருதார யோகம் உண்டாவது, திருமணம் செய்து சிறிது நாட்களிலேயே பெண் தன் தாய் வீட்டிற்கு வந்துவிடுவது, கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் சீக்கிரமாகவே இறந்து போவது போன்ற சம்பவங்களும் நடைபெறும்.
இதற்குப் பெயர்தான் புனர்பு தோஷம் இந்த புணர்பு தோஷத்திற்கான பரிகாரங்கள் புனர்பு தோஷம் ஜாதக அமைப்பு இருப்பவர்கள் திருமணஞ்சேரி திருத்தலத்திற்கு சென்று முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம். குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வரலாம் முடி காணிக்கை செலுத்துவது மிகவும் நன்று என்று சொல்லப்படுகிறது.
தொடர்ந்து வரும் மூன்று பவுர்ணமி தினங்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று 9 துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமணத்தடை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.