தமிழகத்தில் கடன் அதிகமாக இதுதான் காரணம்! அந்தத் துறைகளை சரி செய்ய வேண்டும்!
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் காட்டிய பாதையில் வந்தது எனவும் அவர் கூறினார் தமிழ்நாட்டின் தொழில் துறை உற்பத்தி பீகார் உத்தரப் பிரதேசத்தை விட மோசமாக உள்ளது என பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில்
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், அதன்பிறகு பல மடங்கு அதிகரித்தது; அ.தி.மு.க. அரசு கூறிய கடன் கணக்கு சரியாக இல்லை.
தமிழ்நாட்டில் கடனுறுதி அளவு அதிகமுள்ள துறைகள் மின் வாரியம், போக்குவரத்து துறை; மின்சார வாரியத்திற்கு 90 சதவீதம் போக்குவரத்து துறைக்கு 5 சதவீத கடனுறுதி அளவு உள்ளது.
மின்சாரத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின் வாரியத்தை விட பீகார் மின் வாரியம் நல்ல நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி பீகார், உத்தரப்பிரதேசத்தை விட மோசமாக உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது.
2008 – 09-ம் ஆண்டில் 13.35 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2020 – 21-ல் 8.7 சதவீதமாக வீழ்ச்சி.
15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரியை உயர்த்தாமல் இருப்பது நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியம் போன்ற மாநிலங்களைப் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் மின்சாரம் சார்ந்த வரிகள் குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி 4.65 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
ஒருநாள் வட்டியாக ரூ.87.31 கோடியை தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.
69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்ற.
மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன; 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரி மாற்றியமைக்கப்படவில்லை.
2021 – 22ல் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கி ரூ.20,033 கோடியாக உள்ளது.
வரி இல்லை என்றால் பணக்காரர்களே பயனடைவார்கள், ஏழைகள் பயனடைய மாட்டார்கள்.
குடிநீர் வடிகால் வாரியத்திற்கும், மின் வாரியத்துக்கும் உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள கடன் ரூ.1,743.30 கோடி.
கார்ப்பரேட்டுகளுக்கான வரிவருவாய் விகிதத்தை ஒன்றிய அரசு குறைத்ததால் மாநிலங்களுக்கு பாதிப்பு. என கூறினார்.