தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் நோய்த்தொற்று! கட்டுப்பாடுகள் தீவிரம்!

0
163

சென்ற இரண்டு வார காலமாக தமிழகம் கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் நோய் தொற்று பரவ மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது பரவலின் வேகம் குறைந்து வந்த நிலையில், கேரளா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல தற்சமயம் தமிழகத்திலும் ஒருசில மாவட்டங்களில் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் நேற்றைய தினம் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் சென்ற இரண்டு வார காலமாக தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் உற்பத்தி 7 மாவட்டங்களில் நடைபெற்ற அதிகரித்திருக்கிறது. கேரளாவில் 11 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இமாச்சல் பிரதேசத்தில் 6 மாவட்டத்திலும், கர்நாடகாவில் 5 மாவட்டத்திலும், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மேற்கு வங்கத்தில் இருந்து தலா இரண்டு மாவட்டங்களிலும், மேகாலயா மற்றும் மிசோரத்தில் ஒரு மாவட்டத்திலும் ஒரு நாளை நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் அரியலூர், புதுகோட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு, கோயமுத்தூர்,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த பாதிப்பின் கேரள மாநிலத்தில் மட்டும் 51.51 சதவீத பாதிப்பு பதிவாகி இருக்கிறது. அங்கே நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் குழு சென்றிருக்கிறது.

11 மாநிலங்களில் இருக்கின்ற 44 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு பத்து சதவீதமாக இருந்து வருகிறது. நாட்டில் டெல்டா வகை 586 மாதிரிகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நோய்தொற்று குறைந்து வரும் சமயத்தில் மேலே சொல்லப்பட்ட மாவட்டங்களில் மட்டும் நோய்தொற்று அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாவட்டங்களில் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை கடுமையாக்கி நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! பலிக்காத திமுக கனவு!
Next articleமுன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்!