மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு! சிக்கிய வாகனங்கள்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
இமாச்சல் பிரதேச மாநிலத்தில், கின்னவூர் மாவட்டத்திலுள்ள நெடுஞ்சாலையில் இன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளோடு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. ராம்பூர் ஜூரி பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மீதும், மேலும் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீதும் விழுந்தது.
இந்த நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மற்றும் கார் இரண்டும் சிக்கிக் கொண்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு குழுவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஸ்ஸில் 25-30 பயணிகள் பயணம் செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். டிரைவர் உட்பட 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு இந்தோ திபெத்திய எல்லைப் போலீசாரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாகூரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அந்த காட்சிகள் பார்ப்போரை மிகுந்த அதிர்ச்சி அடைய செய்தன. அப்படியே மலைகள் பெயர்ந்து விழும் போது யார்தான் என்ன செய்ய முடியும். ஆனால் இயற்கை முடிவு செய்து விட்டால் எப்படி எல்லாம் நம்மை ஆட்கொள்கிறது பார்த்தீர்களா? அந்த காட்சிகள் பார்த்த மக்கள் மிகவும் பிரமிப்பாக உணர்ந்தனர்.