கருட பஞ்சமியன்று விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள் என்னென்ன?

Photo of author

By Sakthi

பெருமாளின் வாகனமாக இருக்கும் பகவான் தோன்றிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி அன்று செய்யவேண்டியது என்ன என்பதையும், இதனால் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பதையும், இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் அருகில் இருக்கின்ற பெருமாள் கோவிலுக்குச் சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் கருட பகவானுக்கு உரிய மந்திரங்களை ஒன்பது முதல் 27 முறை வரையில் சொல்லி வணங்குவது மிக நன்று. அதன்பின்னர் பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோவிலை மூன்று முறை சுற்றி வந்து வீடு திரும்பலாம் என்று சொல்லப்படுகிறது.

கருட பஞ்சமி தினத்தன்று விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று கருவறையில் பெருமாளையும், வழிபாடு செய்பவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களை நீக்கி தீவிரத் தன்மை குறைந்து நற்பலன்கள் கிடைக்கும். வீட்டில் விஷப்பாம்புகள் பூச்சிகள் போன்றவை வராமல் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

கண் திருஷ்டிகள் துஷ்ட சக்தியும் பாதிப்புகள் உள்ளிட்டவை நீங்கும் மனதிற்கு இனிய வாழ்க்கை துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்க பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.எதையும் சாதிக்க கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் ஏற்படும்.