ஊட்டியாக மாறிய சென்னை நகரம்!

0
103

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் இருக்கின்ற உதகை, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. கோயம்பேடு, மயிலாப்பூர், எம்ஜிஆர் நகர் போன்ற இடங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.

அதோடு புறநகர்ப் பகுதிகள் ஆக இருக்கும் மதுரவாயல், போரூர், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி போன்ற இடங்களில் மிதமான மழை பெய்கிறது. அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் சென்னை ஊட்டி போல காட்சி அளித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Previous articleசோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்!
Next articleமாறாத பெட்ரோல் டீசல் விலை!