ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இதன்காரணமாக, அந்த நாட்டு மக்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக முயற்சி செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
வெகு நாட்களாக நீடித்து வந்த ஆப்கானிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையேயான போர் தற்சமயம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒட்டுமொத்தமாக அரசு அதிகாரத்தை அனைத்தையும் தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி விட்டனர். அதிபர் தலைமறைவாகி விட்டார். இதற்கு காரணம் இந்த விவகாரத்தில் இந்த விவகாரத்தை அமெரிக்கா சரியாக கையாளாததுதான் என்று சொல்லப்படுகிறது.
காரணம் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகளை அமெரிக்க அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் காரணமாக, அங்கே தாலிபான் பயங்கரவாதிகளின் கை ஓங்கி தற்சமயம் அந்த நாட்டு அரசாங்கத்தை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய பின்னர் தாலிபான் அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், எங்கள் தரப்புக்கும், நடந்துவந்த மிக நீண்ட கால போர் முடிவுக்கு வந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல கடந்த முறையை போல நாங்கள் ஆட்சி செய்யப்போவதில்லை என்றும் தாலிபான் அமைப்பு உறுதி செய்தது.
அத்தோடு பெண்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கொடுக்கப்படும் என்று தாலிபான்கள் தெரிவித்தது. ஆனாலும் அது பொய்யான கருத்து என்றும் தாலிபான்கள் உண்மையில் மிகக்கொடுமையானவர்கள் அவர்களுடைய பேச்சுக்களை யாரும் நம்ப இயலாது என ஆப்கானிய பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதனை உறுதி செய்யும் விதத்தில் தாலிபான்கள் தங்களுடைய உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். முதலில் பெண்கள் வேலைக்கு செல்லலாம் என்று தெரிவித்த தாலிபான்கள் தற்சமயம் ஆப்கானிஸ்தான் அரசு ஊடகத்தில் பணியாற்றிய பெண் செய்தி வாசிப்பாளர்கள் செய்தியாளர்கள் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக தாலிபான் செய்தியாளர்களை நியமனம் செய்து இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், கடந்த புதன்கிழமை அந்த கந்தகரில் இருக்கின்ற இந்திய துணை தூதரகத்தில் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்து அங்கே இருக்கின்ற ஆவணங்களை சோதனை செய்ததாக தகவல் கிடைத்திருக்கிறது.