இன்று முதல் மாணவர்கள் இதனை செய்து கொள்ளலாம்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
115

நோய்த்தொற்று பரவாமல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2020 மற்றும் 21ம் கல்வி வருடத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு சான்றிதழில் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு இருக்கும் என்று பள்ளிக் கல்.வித்துறை அறிவித்து இருக்கிறது.

உயர்கல்வி சேர்க்கைக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளமான www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, உள்ளிட்டவற்றை பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதோடு பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் இருக்கின்ற மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வரும் 1ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை!
Next articleமீண்டும் கொடைக்கானல் செல்ல அனுமதி! சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி!