டோக்கியோவில் களைகட்டிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்! தங்கமகன் கலந்து கொள்ளவில்லை!

Photo of author

By Hasini

டோக்கியோவில் களைகட்டிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்! தங்கமகன் கலந்து கொள்ளவில்லை!

Hasini

Weeded Paralympics in Tokyo! Goldman did not attend!

டோக்கியோவில் களைகட்டிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்! தங்கமகன் கலந்து கொள்ளவில்லை!

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும், பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். கொரோனாவின் காரணமாக கடந்த ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32வது ஒலிம்பிக் போட்டியை, இந்த வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ஆம் தேதி முதல் இந்த மாதம் 8 ஆம் தேதி வரை நடந்தது.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் ஆரம்பித்து செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அதிலும் வரலாற்றிலேயே இவ்வளவு போட்டியாளர்களை கொண்ட இந்திய அணி பங்கேற்பது இதுதான் முதல் முறையாம்.

இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில், இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேக் சந்த் தேசிய கொடியை ஏந்திச் சென்றார். இந்த போட்டிகளில் தங்க மகன் மாரியப்பன் இடம்பெறவில்லை. அவர் பங்கேற்பார் என அனைவரும் ஆர்வமாக இருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் போட்டியில் பங்கேற்காமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது இந்தியாவிற்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால் கொரோனா பெரும் தொற்று அதன் பங்கை செய்யும் போது நாம் என்ன செய்ய முடியும்.