சிறைக்குள் இதெல்லாம் செய்ய அனுமதி உள்ளதா? இவர்கள் ஒரு படி மேலேயே சென்றுள்ளனர்!

0
161
Is it permissible to do all this in prison? These guys have gone one step further!
Is it permissible to do all this in prison? These guys have gone one step further!

சிறைக்குள் இதெல்லாம் செய்ய அனுமதி உள்ளதா? இவர்கள் ஒரு படி மேலேயே சென்றுள்ளனர்!

தவறு செய்தவர்களை சட்டம் தண்டிக்கும் என்று கூறினாலும் சட்டம் மற்றும் போலீஸ்காரர்கள் வசதி படைத்தவர்களை ஒரு மாதிரியும், வசதி இல்லாதவர்களை ஒரு மாதிரியும் தான் நடத்துகின்றனர். அது அங்கு மட்டுமல்ல. எல்லா இடங்களிலுமே இருக்கின்றது. வேண்டியவர்கள் என்றால் ஒரு மாதிரி தான் அவர்கள் பழகுகிறார்கள்.

அதுபோல் சிறைச்சாலைக்கு செல்லும் வசதி படைத்த கைதிகள், குற்றவாளிகள் எப்போதும் அவர்களுக்கென தனி அந்தஸ்து உடைய ஒரு லாக்கப்பில் தான் தங்க வைப்பார்கள் என்று சிலர் கருத்து கூறி வருவார்கள். முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூட அப்படி ஒரு அப்படி ஒரு சிறை அறையில் தான் இருந்திருப்பாரோ? என்ற கேள்வி கூட பலருக்கு எழுந்த நிலையில் தற்போது ஆதாரத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.

தேடப்பட்டு வந்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான ராகுல் காலா மற்றும் நவீன் பாலி ஆகியோர் டெல்லி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறையில் ஏற்கனவே பிரபல ரவுடி நீரஜ் பாவனாவுடன் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சிறைக்குள் சகல வசதிகளுடன் மதுபானம் அருந்தியும், அதேபோல் கையில் மொபைல்போன் பயன்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோ இணையத்திலேயே பதிவிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என மட்டும் கூறியுள்ளனர். இது இணையத்தில் வெளியானதன் காரணமாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்களா? சொல்லுங்கள். குற்றவாளி தண்டனையை அனுபவிக்க சிறைச்சாலைக்கு செல்கிறார்கள். ஆனால் இவர்களோ மதுபானம் அருந்தி, கையில் கைபேசியுடன். என்ன? கொண்டாடவா சிறைச்சாலைக்குள் சொல்கிறார்கள். அது எப்படி அவர்களுக்கு தண்டனையாக இருக்க முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் இதைப் பற்றி யோசித்தால் மட்டுமே இதற்கு விடை காண முடியும்.

Previous articleஅந்த வீ.ஜே மகேஸ்வரியா இது? படு ஹாட்டா வெளியிட்ட புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்
Next articleதமிழக சட்ட சபையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர்!