99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!
மதுரையில் சுமார் இரண்டு இலட்சம் சதுர அடிப்பரப்பளவில் 8 மாடி கட்டிடங்கள் ஆக கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலகம் கட்டுவதற்காக என மதுரையில் பல்வேறு இடங்களிளை ஆய்வு செய்தாலும், இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம்தான் நூலகம் கட்ட ஏதுவாக இருக்கும் என முடிவு செய்துள்ளனர். அந்த இடத்தில் பொதுப்பணித்துறை கட்டிடத்தில் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுயிக் வாழ்ந்ததாகவும், எனவே நூலகம் கட்டுவதற்கு பெரியாறு வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
ஆனால் இதுகுறித்து ஒரு எழுத்தாளர் திரு. முத்து கிருஷ்ணன் அவர்கள் கருணாநிதி நூலகம் தொடர்பாக, திரு பென்னிகுயிக் அவர்களது பேரன் மற்றும் பேத்திகளான டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோருடன் பேசியதாகவும், எனவே அவரது வீடியோ பதிவை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இது குறித்து ஃபேஸ்புக் பதிவில் இந்த சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்தது என்றும் தெரிவித்தார்.
அதில் அவரது பேரன்கள் இந்த சர்ச்சையே தேவையற்றது. இந்த நூலகம் கட்டுவதற்கு அவரின் குடும்பத்தார் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்கள். மேலும் எங்களது தாத்தா இந்த பகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளார். மதுரையையும், இந்தப் பகுதியையும் அவர் மிகவும் விரும்பினார் என்றும் கூறினார்கள். இதன் வளர்ச்சிக்காகத்தான் பெரியாறு அணையை முழுமையான ஈடுபாட்டுடன் கட்டி முடித்தார் என்றும் கூறினார்கள்.
இங்கு நூலகம் அமைய வேண்டும். இதற்கு எங்கள் குடும்பம் முழுவதும் உறுதுணையாக இருப்போம் என்றும், இந்த கலைஞர் நூலகத்திற்கு நாங்கள் லண்டனிலிருந்து எங்களால் இயன்ற புத்தகங்களை பரிசளிப்போம் என்றும் கூறினார்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த திட்டத்திற்கு பெரியாறு வைகை பாசன விவசாயம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இதை பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பிறந்த வருடம், வாழ்ந்த இடங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் விவாதிக்கப்பட்டன. பென்னிகுயிக் அவர்கள் 1841 ம் ஆண்டு பிறந்து 1911 இல் மறைந்ததாகவும், அதன் பின்னர் பொதுப்பணித்துறை இந்த இடத்தில் பூமி பூஜை செய்து 1913ல் இந்த கட்டிடம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டதும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
அவர் மறைந்த பின்னர் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் இங்கு அவர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த வினா சட்ட சபையிலும் கேட்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சரும் விளக்கம் அளித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது முதல்வர் பொறுமையாக அதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். எங்களது முடிவு மாற்றிக் கொள்ளப்படும் என்றும் கூறினார். அதற்கு பலத்த கை தட்டல்கள் எழுந்ததும் குறிப்பிடத் தக்கது.