கொடநாடு வழக்கில் மேல்விசாரணை நிறுத்த சொல்லி மனு! ஆட்சி மாறியதால் தள்ளுபடி செய்ய வேண்டும்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டு உள்ளது. அந்த வழக்கில் போலீஸ் தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் போலீஸ் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால் அவர்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்குமாறு பல தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக தெரிவித்து இருந்தார்.
அரசு தரப்பில் இதுவரை 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில் கோர்ட்டு அனுமதி இன்றி தன்னிடம் மேல் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த வழக்கை விரைந்து முடிக்கும் படி விசாரணைக்கு உத்தரவு இடவும், விசாரணையை விரைந்து முடிக்கும்படியும் கோர்ட் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் போலீஸ் விசாரணை நடத்த முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்து அந்த மனுவைத் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ரவியின் சார்பில் வக்கீல் ஆனந்த கண்ணன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் இந்த வழக்கை போலீஸ் விசாரணை செய்வது சட்டத்திற்கு புறம்பானது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்றும் அதை கருத்தில் கொள்ளாமல் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
எனவே கொள்ளை கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யவும், மேல் விசாரணை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,