வாட்ஸ் ஆப் DP யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்கான வழி

0
311

வாட்ஸ் ஆப் DP யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்கான வழி

ஒரு பதினைந்து இருபது வருட காலங்களுக்கு முன்பெல்லாம் நாம் கைபேசி பயன்படுத்தினாலும், அதில் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே இருக்கும். அதை மட்டுமே நாமும் பயன்படுத்தி வந்தோம்.

இந்நிலையில் தற்போது காலம் மாறி போய் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனும் கையுமாக சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அனைவருமே டெக்னாலஜி தெரிகிறதோ? இல்லையோ? அதை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதில் முக்கியமான ஒரு அம்சம் தான் வாட்ஸ்ஆப். அந்த வகையில் எஸ்.எம்.எஸ் க்கு பதில் தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். யாருக்கு எந்த மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும், புகைப்படம் பகிர வேண்டும் என்றாலும், வாட்ஸ்அப் மூலம் மட்டுமே எல்லா பரிவர்த்தனைகளும் நடக்கின்றன.

புகைப்படங்கள், ஜாதகங்கள், குடும்ப விவரங்கள் என ஒரு திருமணத்திற்கு சகலமும் பரிமாற்ற வாட்ஸ்அப் பெரிதும் உதவுகிறது. இது போல் பல்வேறு தகவல்களை பரிமாறவும் பயன்படுகிறது.

இப்படி நாம் உபயோகிக்கும் வாட்ஸ் அப்பில் டிஸ்ப்ளே பிக்சர் என்ற ஒன்றை நாம் அப்டேட் செய்கிறோம். அப்படி செய்யும் பிக்சரை யார் யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது நமக்கு தெரியுமா? தெரியாது.

ஆனால் தினமும் பல பேர் வாட்ஸ் ஆப்பில் டிபி அப்டேட் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது அந்த டிபி புகைப்படத்தை யார், யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று நாம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அதற்கும் தற்போது ஒரு டெக்னாலஜி வந்துள்ளது.

அது எப்படி பதிவிறக்கம் செய்யலாம் தெரிந்து கொள்ளலாம், என்று பார்க்கலாம், வாருங்கள். வாட்ஸ்அப் மூலம் தெரியாத நபர்களை பிளாக் செய்யும் வசதியும் உள்ளது. அதே போல் தெரிந்த நபர்களிடம் நாம் எல்லாவற்றையும் காண்பிக்கும் வசதியும் உள்ளது. ஆனாலும் நாம் பிளாக் செய்யும் நபர்களும் நமது டிபியை நமக்கு தெரியாமல் பார்க்கும் சூழல் நிலவி வருகிறது. எனவே அதை யார் யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொண்டால் நமக்கு எந்தவித பாதகமும் இல்லாமல் இருப்போம்.

அதைத் தெரிந்துகொள்ள ஒரு சிறிய ஆண்ட்ராய்டு ஒன்றை நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே நமதுடிபி ஐ யார் பார்கிறார்கள் என அறிய WhatsApp Who Viewed Me அல்லது Whats Tracker  இதை டவுன்லோட் செய்ய வேண்டும். இதை பதிவிறக்கம் செய்யும் போது ஒன் மொபைல் மார்க்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த செயலி நமது போனில் பதிவிறக்கம் செய்யப்படும்.

இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு, நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நமது டிபி பிக்சர் யார் யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பது போன்ற தரவுகளை எடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் நமக்கு எந்த தரவுகளையும் காட்டாது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உங்களது டிபி ஐ பார்க்கும் நபர்களின் எண்கள் மற்றும் சுய விவரங்களை நமக்கு அது காண்பிக்கும். ஆனால் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் பார்ப்பவர்களை மட்டும்தான் இது காட்டும். அதற்குமுன் பார்த்தவர்களை இதனால் பார்க்க முடியாது. இதன் முதல் பக்கத்தில் உங்களது வாட்ஸ்அப் காண்டக்ட் பார்ப்போம். இரண்டாவது பக்கத்தில் உங்களின் Visitede அதாவது சுயவிவர பக்கம் காட்டப்பட்டிருக்கும்.

Previous articleHome Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?
Next articleசிம் கார்டு மூலையில் கட் செய்ய காரணம் என்ன? அறிந்து கொள்ளுங்கள்