இந்தியாவில் சீன நாட்டின் செயலிகள் மக்களுடைய தரவுகளை அதிக அளவில் பெருகி வருகின்றது என்று குற்றம் சாட்டப்பட்டு 200க்கும் மேற்பட்ட சீன செயல்களை மத்திய அரசு பொதுமக்களின் தகவல் பாதுகாப்பு கருதி தடை செய்தது.இந்த தடைக்கு பின்னர் இந்தியா, சீனா எல்லையில் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் உண்டான மோதலும் மிக முக்கியமான காரணம் என்று பேசப்பட்டாலும் சீன அரசு தற்சமயம் தன்னுடைய நாட்டின் தகவல் பாதுகாப்புக்காக சீன நிறுவனங்கள் மீது எடுத்திருக்கின்ற நடவடிக்கையின் மூலமாக மத்திய அரசு செய்தது சரி என்றும், எல்லை பிரச்சனைக்காக தடை செய்யப்படவில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது.
இவ்வளவு பிரச்சனைக்கு பின்னரும் இந்தியாவில் இதுவரையிலும் சீனா செயலிகள் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் சென்ற ஒரு வருட காலத்தில் அதாவது தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை இந்த செயலிகள் அடைந்திருக்கிறது.நாட்டில் சீனா செயலிகள் தடை செய்யப்பட்ட பிறகு பல முன்னணி நிறுவனங்களின் செயல்கள் கூட அதாவது அலிபாபா ஜியோமி போன்ற நிறுவனங்களின் செயலிகள் தங்களுடைய சுய அடையாளத்தை மறைத்து புதிய நிறுவனத்தின் பெயரிலும், சீன பெயர்கள் அல்லாத பெயரிலும், இந்தியாவில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், இந்தியாவில் தற்சமயம் முன்னிலையில் இருக்கின்ற 60 செயலிகள்பட்டியலில் 8 சீன செயலிகள் இருக்கிறது. இந்த எட்டு சீன செயலிகளில் சுமார் 217 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஜூலை 2020இல் இந்த எட்டு செயல்களின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெறும் 96 மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டுமே என்று சொல்லப்படுகிறது.
இருந்தாலும் சென்ற 13 மாதங்களில் சீன செயலிகள் ஆகவே இருந்து தன்னுடைய அடையாளத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைத்து சுமார் 115 மில்லியன் வாடிக்கையாளர்களை பலவிதத்தில் பிடித்து வைத்திருக்கிறது. இந்தியாவில் சீன செயலிகள் பாதுகாப்பற்றது என தெரிந்தும் ஒரு சிலர் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்து உள்ளதும் நடந்தேறியிருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 267 சீன செயலிகள் தடை செய்யப்பட்டது என்ற தலையில் திட்டம் பிரவுசர் ஹலோ அலி எக்ஸ்பிரஸ் லைக் ஷேர் இட் மீ விசேட் மை டு விகோ என பல செயலிகள் தடைசெய்யப்பட்டது.
இந்த தடைக்கு பின்னரும் கூட சுமார் 13 மாதங்களுக்குப் பின்னர் ப்ளே இட் என்ற சீனசெயலி இந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் செயலியாக இருக்கிறது. வெறும் இருபத்தி எட்டு மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ப்ளே இட் தற்சமயம் 67 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறது.