ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!
ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம்.
அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு கௌரவிக்கிறது. இந்த விருதுக்காக நாம் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். அவர்கள் அதற்குத் தகுதியானவர்களா என்பதை தெரிந்து கொண்ட அரசு அவர்களுக்கு இந்த விருதுகளை சமர்ப்பிக்கிறது. நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி என அனைத்து பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த விருதுகளை மாநில அரசு வழங்கி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் இதற்கான 11 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி விருதுகளை வழங்கினார். இவர்களுக்கு புதுமையான கற்பித்தல், கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல், பள்ளிகளில் சுற்றுச்சூழல் மேம்படுத்துதல், மாணவர் சேர்க்கையை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதுகள் கிடைத்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.
தொடர்ந்து, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களுக்கும், வெள்ளிப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்திற்கான காசோலைகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.விருது பெற்றவர்கள் விபரங்கள்:
1.ரத்தினசபாபதி- தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சித்தோடு,
2.சந்திரசேகரன் – பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி குட்டிபாளையம்,
3.மணிகண்டன்- பட்டதாரி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி,
4.பாலகிருஷ்ணன்- பட்டதாரி ஆசிரியர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பவானி,
5.சேட்டு மதார்சா- பட்டதாரி ஆசிரியர், ஈ.கே.எம் அப்துல்கனி மதரசா இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி, ஈரோடு,
6.கல்யாணி- தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறுகளஞ்சி.
7.நம்பிக்கை மேரி- தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காடகநல்லி,
8.சுமதி- இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஏழூர்,
9.ரஞ்சித்குமார் – இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குருவரெட்டியூர்,
10.தீபலட்சுமி – பட்டதாரி ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அவ்வையார் பாளையம்,
11.ரவிக்குமார் – முதுகலை ஆசிரியர், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை.