நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்!
ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். அந்நாட்டு அதிபர் அவர்களுக்கு பயந்து ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவர்களுக்கும் தலைவராக முல்லா அப்துல் கனி வரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்து.
இந்நிலையில் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்துல் கனி வரதர் மற்றும் ஹக்கானி வலை குழுவுக்கும், கைகலப்பு ஏற்பட்டதன் காரணமாக வரதருக்கு படுகாயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பு பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்து வந்தார். அவர் தலிபான்களுடன் நடத்திய தீவிரமான பேச்சுவார்த்தையில் முல்லா கனி வரதர் மற்றும் ஹனஸ் ஹக்கானி இரண்டு பேருமே பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் தான் என்றாலும், ஹக்கானி தீவிரமான பாகிஸ்தான் பக்தர்.
எனவே அவரை அதிபராக பாகிஸ்தான் மிகவும் விரும்புகிறது என்றும் ஒரு புறம் செய்திகள் பரவி வருகின்றது. இதை முன்னாள் அதிபர் வரதரின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக அங்கு பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்குள்ளாகவே பல மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் தலையீட்டிற்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகின்றனர்.
மேலும் பாகிஸ்தான் நம் நாட்டு விஷயத்திற்குள் மூக்கை நுழைக்க கூடாது என்று கூறியும், காபூலில் உள்ள மக்கள் அனைவரும் போராடி வருகின்றனர். எப்போதுமே ஆப்கானிஸ்தானின் மக்கள் வெளிநாட்டு ஆதிக்கத்தை விரும்ப மாட்டார்கள் என்று வரலாறே உள்ளது. அப்படி இருக்கும்போது ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அதிகாரம் செலுத்த நினைப்பதை, நாங்கள் விரும்பவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் விருப்பமான நபர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதையும் நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் காபுலில் குவிக்கப்பட்டிருக்கும் தலிபான் படைகள் போராட்டக்காரர்களின் மீது கடுமையான தாக்குதல்களை ஏற்படுத்தி உள்ளனர். இந் நிலையில் வானத்தை நோக்கியும், போராட்டக்காரர்களையும் நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஆனால் இதில் ஏற்பட்ட இழப்பு குறித்து இதுவரை எந்த செய்திகளும், தகவல்களும் வெளியாகவில்லை. அங்கு தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படி சூழ்நிலை இருந்தாலும் பெண்கள் அங்கு அச்சமின்றி தலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
தங்களது தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநிறுத்தவே அவர்கள் இவ்வாறு போராடுகிறார்கள். மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் தலிபான்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். அதை தெரிவிக்கும் விதமாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது. காபூலில் பெண்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், அவர்களின் போராட்டம் காபூல் நகரின் மேற்கிலுள்ள தஷ்த் இ பர்ச்சில் தொடங்கியது. மேலும் அவர்கள் பெண்கள் இல்லாத மந்திரிசபை தோல்விதான் அடையும் என்றும் கோஷமிட்டு வருகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் தனக்கு ஆதரவாக செயல்படுபவருக்கு உதவி செய்வதாகவும், குற்றம் சாட்டி பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் திரண்டு விட்டனர்.
அவர்களை கலைக்க வேண்டி தலிபான்கள் மீண்டும் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மிகவும் கோபம் அடைந்ததாகவும் அறியப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் தூதரகம் அருகே பல ஆப்கானியர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலீபான் படையைச் சேர்ந்த ஒருவர் ஹிஜாப் அணிந்த பெண்ணை நோக்கி துப்பாக்கியை காட்டிய காட்சி ஒன்று காபூலில் கடந்த செவ்வாய்க்கிழமையான நேற்று எடுக்கப்பட்டது.
மேலும் இது ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது அந்நாட்டில் உள்ள பெண்களின் மன உறுதியை காட்டுகின்றது. மேலும் இதற்கு பல விதங்களில் பதிவுகளும் இடப்பட்டு வருவதும் குறிப்பிடப் தக்கது.
https://twitter.com/ZahraSRahimi/status/1435237441842159622/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1435237441842159622%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FWorld%2F2021%2F09%2F08180108%2FWoman-protester-stands-firm-as-Taliban-fighter-points.vpf