குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்! தொழுகைக்கு சென்று வந்த போது 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

Photo of author

By Hasini

குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்! தொழுகைக்கு சென்று வந்த போது 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஜீவா நகர் பகுதியில், வசீம் அக்ரம் வசித்து வருகிறார். 43 வயதான இவர் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆவார். அதே போல  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். நேற்று அவர் தன் குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றார்.

தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து இறங்கியது. தட தட வென இறங்கிய அவர்கள், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அதே காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் வாணியம்பாடி போலீசார் விரைந்து வந்து வசீம் அக்ரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவலை அறிந்த ஏராளமான முஸ்லிம்கள் அங்கு திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே வேலூரில் இருந்து மீண்டும் அவரது உடல் சொந்த ஊரான வாணியம்பாடி கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அவர்கள் கூறினார்கள்.

எனவே ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக வாணியம்பாடியில் பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் அந்த பகுதியில் அதிக பதற்றம் நிலவுகிறது. கொலையாளிகள் யார்? இதற்கான காரணம் என்ன? என்பதை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் கொலை செய்யப்பட்ட அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். இதுகுறித்து விசாரிக்க சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டிஐஜி பாபு மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஜீவா நகரில் வசித்து வரும் இம்தியாஷ் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், வசீம் அக்ரம் அவரைப் பற்றி காவல் துறைக்கு தகவல் கொடுத்ததன் காரணமாக  இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், ஏற்கனவே அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து தப்பியோடிய ஆறு பேரில் இரண்டு பேர் காஞ்சிபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர் அவர்கள் ஓட்டேரி வண்டலூர் பகுதியை சேர்ந்த பிரஷாந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.