ஒரு சில வருடங்களாக தமிழகத்தில் சரியாக மழை பொழிய வில்லை என்றுதான் சொல்லவேண்டும். பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, விவசாயம் நடைபெற்று இருக்கிறது. ஆனால் காவிரி நதியில் கர்நாடகா காவிரி மேலாண்மை வாரியத்தை உத்தரவின் அடிப்படையில் நீர் தந்து கொண்டிருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்து இருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டு இருப்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் ,நாளையும் கோவை, உதகை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. ஓரிரு உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தாலே போதும் தமிழகத்தில் வறட்சி தான் நிலவும் என்ற ஒரு சூழ்நிலை இது நாள் வரையில் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து மழை பெய்து வருவதால் திமுகவும், தமிழக மக்களும், சற்று மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.