தமிழகத்தில் அடுத்தடுத்து வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0
128

எதிர்வரும் 22ஆம் தேதி நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவை காரணமாக, இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்களான வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய உள் மாவட்டங்கள் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது.

அதோடு நாளைய தினம் பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பொழிவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு நாளை மறுதினம் தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. வரும் 23 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

எதிர்வரும் 22ஆம் தேதி நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு அளவு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.

Previous articleஓபிஎஸ் இடமிருந்து புதிய ஆளுநருக்கு பறந்த கடிதம்! மன்னித்துவிடுங்கள் மனமுருகிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!
Next articleநம்முடைய நோக்கம் இதுதான்! பாட்டாளிகள் தொடர்ந்து செயல்படுங்கள் ராமதாஸ் முக்கிய கோரிக்கை!