அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரியா! புதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவு!
சீனாவின் எதிர்கொள்ள வேண்டி இந்தோ பசுபிக் பிராந்தியத்தில், ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உருவாகியுள்ளன. இந்த புதிய திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவின் படை பலத்தை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கிடைக்க உதவும் என பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கடுமையாக எதிர்த்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் இடையே ஏற்பட்ட நட்பு மிகவும் ஆபத்தானது எனவும், ஆசியா பசிபிக் பகுதிகளில் பாதுகாப்பு நிலையை இது கடுமையாக பாதிக்கும் என்றும், வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தை வடகொரியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இந்த ஒப்பந்தம் தங்களது பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்குமேயானால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க சிறிதும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.