மோடி இங்கு உடனே நேரில் வர வேண்டும்! அப்போதுதான் நான் இதை செய்ய ஒப்புக்கொள்வேன்!
தற்போது அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும் மாநில அரசுகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு குழுக்களை அமைத்து அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. எல்லா இடங்களிலும், கிராமங்கள் தோறும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தி வருகின்றனர்.
அனைத்து மாநிலங்களும் அந்த மாநிலத்தில் அனைவரும் முதல் டோஸ் போட்டு முடித்து இருக்க வேண்டும் என்ற நோக்கில் மெகா தடுப்பு முகாம்களையும் கையாண்டு வருகிறார்கள். தற்போது இந்த திட்டம் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் தார் மாவட்டத்தில் இன்று பழங்குடியினர் கிராமமான கிக்கார்வாசுக்கு தடுப்பூசி போடும் ஒரு சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்றனர்.
அப்போது அவர்கள் கிராமத்தினர் அனைவரிடமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இன்று அங்கு மெகா தடுப்பூசி முகாம் மேற்கொளவும் இருந்தது. அப்போது அதில் ஒரே ஒரு கிராமவாசி மட்டும் தனது மனைவியுடன் அதற்கு மறுத்துவிட்டார். அப்போது அவரிடம் அந்தக் குழு அதற்கான காரணம் கேட்டு நீங்கள் யார் வந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
முதலில் அவர் மூத்த அதிகாரி வந்தால் போட்டுக் கொள்வேன் என கூறிய நிலையில், அந்த குழு அவரிடம் துணை கோட்ட மாஜிஸ்ட்ரேட் வந்தால் ஒத்துக் கொள்வீர்களா? என்று கேட்டனர். அப்போது அந்த கிராமவாசி அவரிடம் சொல்லி பிரதமர் மோடியை இங்கு வர சொல்லுங்கள். அவர் இங்கு வந்தால் மட்டும்தான் நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
எவ்வளவோ அந்த குழு உறுப்பினர்கள் அவரை வற்புறுத்தியும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. அதன் காரணமாக சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டனர். மேலும் இது தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறித்து கூறும்போது நாங்கள் மீண்டும் அந்த கிராமவாசியை தடுப்பூசி போட்டுக் கொள்ள சம்மதிக்க வைப்போம் என்று மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் பிரதமர் வராமல் அவர் ஒப்புக் கொள்வாரா? என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.