ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! பெங்களூரிடம் சரிந்தது மும்பை!

0
150

ஐபிஎல் போட்டியின் நேற்றைய தின முப்பத்தி ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியுடன் பெங்களூர் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது அதனை தொடர்ந்து பெங்களூரு சார்பாக விராட் கோலி மற்றும் படிக்கல் உள்ளிட்டோர் களம் இறங்கினார்கள்.

நட்சத்திர வீரர் என்று சொல்லப்படும் படிக்கல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்தார். முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் சேர்த்தது மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் தாண்டி அசத்தி இருந்தார். அவர் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு மிகச் சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசியாக 20 ஓவர் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராகுல் மற்றும் ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட் டுகளை எடுத்தியிருந்தார்கள்.

இதனைத்தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் உள்ளிட்டோர் மிக நிதானமாக விளையாடினார்கள். இந்த சூழ்நிலையில்,, 24 ரன்னில் குயின்டன் டி காக் வெளியேறினார்.

இதன்பின்னர் மும்பை அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தன. இஷான் கிஷன் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார், இதனை தொடர்ந்து வந்த சூரியகுமார் யாதவ் 8 ரன்னில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார், குணால் பாண்டியா 8 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து ஹர்ஷத் பட்டேல் 17வது ஓவரில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், ராகுல் சாகர், உள்ளிட்டோரின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கடைசியாக 18 .1 ஓவரில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 111 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலமாக பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இன்றைய தினம் இரவு ஏழு முப்பது மணி அளவில் துபாயில் நடைபெரும் 40 ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும், சந்திக்கின்றன.

Previous articleஅனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
Next articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி!