ரோல்ஸ் ராய்ஸ்ஸின் புதிய அறிமுகம்! இனி ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்!
நம்மில் பல பேர் கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். பலர் பொழுதுபோக்குக்கு கார்களை வாங்கியும் ஓட்டி வருகின்றனர். அதில் சில குறிப்பிட்ட ரக வாகனங்கள் மக்களின் மனதில் பல எதிர்பார்ப்புகளை கொண்டு வந்துள்ளது. அதே போல் சில பிரபல நிறுவனங்களின் மக்கள் மிகவும் விரும்புவர்.
அதில் ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிக்கும் நிறுவனமும் ஒரு பிரபலமான கம்பெனி ஆகும். பலரது கனவாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன காரை ஒரு முறையேனும் பயன்படுத்தி விடவேண்டும் என்பதாக இருக்கும். தற்போது இந்த நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சார கார் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது.
அனைத்து நாகரீக வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த சொகுசு கார் விளங்குவதாக அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றையும் அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய ரக மின்சார காரான சொகுசு காரை பற்றி அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறிய பேட்டியின்போது கூறினார்.
100 கிலோ வாட் பேட்டரி கொண்ட இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம் என்றும் உறுதி அளித்துள்ளது. மேலும் இந்த மின்சார காரின் விலை விபரத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ரோல்ஸ் ராய்ஸ் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் தனது அனைத்து மாடல்களையும் மின்சார கார்கள் ஆக மாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மக்களிடையே மிகுந்த எதிர்பார்பையும் ஏற்படுத்தி உள்ளது.