ஆட்டோவில் இருந்த பணம்! அதை பார்த்த குரங்கு செய்த செயல்!
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது துண்டில் தன்னுடைய ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்து மூடி போட்டு வைத்திருந்தார். அவர் ஆட்டோ ரிக்க்ஷா மூலம் எங்கோ அவரது வீட்டிற்கு கொண்டிருந்தார். அப்போது அவர் இருக்கையில் அந்த பணத்தை வைத்து இருந்தார். தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில் ஓரிடத்தில் ஆட்டோ நின்றது.
அங்கு ஒரு மரத்தில் இருந்த குரங்கு ஆட்டோவில் இருந்த துண்டை பார்த்து பறித்துச் சென்று விட்டது. பின்னர் அந்த குரங்கு அருகில் இருந்த மரத்தில் ஏறி ஆவலாக துண்டை பிரித்துப் பார்த்தது. அதில் தனக்கு உணவு இருக்குமோ என்று பிரித்துப் பார்க்க ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் பணத்தை பறிகொடுத்த நபரோ பதறிப்போய் பணத்தை தந்து விடுமாறு குரங்கிடம் தனது இரண்டு கைகளை நோக்கி கும்பிட்டுக் கை நீட்ட ஆரம்பித்தார்.
இதை அந்த பகுதியில் இருந்தவர்களும் வேடிக்கை பார்க்க தொடங்கினர். அதன் காரணமாக அங்கு கூட்டம் சேரத் தொடங்கியது. துண்டில் உணவு இருப்பதாக நினைத்த குரங்கு அதை பார்த்த போது ஏமாற்றம் அடைந்த பின்பு என்ன செய்வதென்று தெரியாமல், ஏனென்றால் விலங்குகளுக்கு பணம் தேவையில்லை அல்லவா? அதன் காரணமாக துண்டை உதறி விட்டது.
அதன் காரணமாக துண்டில் இருந்த ரூபாய் நோட்டுகள் மரத்திலிருந்து கீழே பறந்தன. சாலையில் விழுந்து காற்றில் பறந்தது. அதை பார்த்த போது பண மழை கொட்டியது போல் இருந்தது. அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பணத்தை எடுத்தனர். சிலர் பணத்தை அவரிடம் திரும்ப கொடுத்தனர்.
அதில் 56 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. அவற்றை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. மீதி பணம் கிடைக்காததன் காரணமாக அந்த நபர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் ஒரு வக்கீலிடமிருந்து பறித்துச் சென்ற இரண்டு லட்சத்தையும் ஒரு குரங்கு மரத்திலிருந்து வீசியதும் குறிப்பிடத்தக்கது. யாரும் அந்த நிகழ்வை மறந்து இருக்க முடியாது.