ராஜஸ்தான் மாநிலம் கிராமத்தை சேர்ந்தவர் கமலாதேவி இவர் பாம்பாட்டி என்று சொல்லப்படுகிறது, அந்த பகுதியில் இருக்கின்ற வீடுகளுக்கு நேற்று வந்த மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் நோய்த்தொற்று தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக சொல்லப்படுகிறது.
அந்த சமயத்தில் கமலா தேவியின் வீட்டிற்கும் வருகைதந்த மருத்துவ குழுவினர் அவரிடம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்கள், இருந்தாலும் தன்னால் ஊசியைச் செலுத்திக் கொள்ள இயலாது என்று மறுப்பு தெரிவித்த அவர் கூடையில் இருந்த பாம்பை வெளியில் எடுத்து ஊழியர்களை நோக்கி மிரட்டி இருக்கிறார்.
எனக்கு தடுப்பூசி செலுத்த நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் மீது பாம்பை ஏவிவிட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த மருத்துவ குழுவினர் ஊர் மக்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். அதன்பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக கமலாதேவி தடுப்பூசி செலுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து அந்த தெருவில் கமலாதேவி உள்ளிட்ட இரண்டு நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.