தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை!
தஞ்சாவூர் அருகே திருப்பனந்தாள் சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். டேவிட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதி வங்கிக்கு சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதன் காரணமாக அனிதாவின் குடும்பத்தினர் அனிதாவை எங்கு தேடியும் காணாத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக எதிர் வீட்டில் இருந்த கார்த்திக் என்பவருடன் பேசியது தெரியவந்தது. அதன் காரணமாக அவரை பிடித்து போலீசார் விசாரிக்கும் போது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார். அவர் குடும்பத்தினர் சேர்ந்து அனிதாவை கொலை செய்து சோழபுரத்தில் உள்ள கருவேலங்காட்டில் புதைத்ததாக கூறியுள்ளார்.
இதனை கேட்ட போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு உடலை தேடி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மேலும் கார்த்திக்கிடம் விசாரிக்கும்போது, கார்த்திக்கின் மனைவி சத்யாவும், அனிதாவும் பள்ளிக் காலத்திலிருந்தே தோழிகள். அந்த நட்பின் காரணமாக சத்யா கேட்கும் போதெல்லாம் பல நகைகளையும் அதாவது 10 பவுன் வரையும், பல லட்சம் பணமாகவும் அந்த குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார் அனிதா.
தற்போது தன் கணவர் வெளிநாட்டில் இருந்து அடுத்த மாதம் திரும்புவதாகவும், அதன் காரணமாக நான் கொடுத்த பணமும், நகையும் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன் காரணமாக அவர்களது வீட்டிற்கு அனிதாவை வரவழைத்த சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர், அனிதாவை அடித்தே கொன்றுள்ளனர். மேலும் அவரது உடலை கருவேலங் காட்டில் புதைத்துள்ளனர்.
இந்த கொலையில் அனிதாவின் தோழி சத்யா, சத்யாவின் கணவர் கார்த்திக், கார்த்திக்கின் தந்தை மற்றும் சத்யாவின் சகோதரன் உள்ளிட்ட 4 பேரும் தொடர்பு உள்ளனர். எனவே அவர்களை கைது செய்து போலிசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான் போல. அது தான் தற்போது தோழி என்று உதவி செய்த பெண்ணுக்கு இந்த பரிதாப நிலை தேவையா? இதிலிருந்து யாருக்கும் பாவம் பார்த்து உதவி கூட செய்ய கூடாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.