பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்!

0
141
PM-led International Airport to open! Kushinagar built by weeds!
PM-led International Airport to open! Kushinagar built by weeds!

பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்!

உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்தது  குஷிநகர். இது புத்த மதத்தினரின் புனித தலமாகும். இங்குதான் புத்தர் தனது கடைசி நாட்களான எண்பதாவது வயதில் படுத்த கோலத்திலேயே மகாபரிநிர்வாணம் அடைந்தார். மகாபரிநிர்வாணம் என்பது பிறவா நிலையாம்.

அதன் நினைவாக மகா பரிநிர்வாணம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பிறவா நிலை அடைந்த காட்சி தத்ரூபமான சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த நகரை உலகெங்கும் உள்ள புத்த மத யாத்திரை தளங்களுடன் இணைக்கின்ற விதமாக தற்போது அங்கு சர்வதேச விமான நிலையம் ஒன்று 260 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த விமான நிலையத்தில் ஜப்பான், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, தைவான் போன்ற புத்த மதத்தை பெரும்பான்மையாக பின்பற்றப்படுகின்ற நாடுகளிலிருந்து புனித பயணிகள் இங்கு வர வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் அவர்கள்  இங்கு வந்து அந்த புத்தர் சிலையை தரிசிக்கும் வாய்ப்பு புத்த மதத்தினருக்கு கிடைக்கிறது.

இந்த சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதன் அடையாளமாக முதல் விமானமாக இலங்கை தலைநகர் கொழும்பு நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று வந்தடைகிறது. இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட புத்த துறவிகளும், முக்கிய பிரமுகர்களும் வருகிறார்கள். குறிப்பாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷேவின் மகனும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார துறை மந்திரியுமான நாமல் ராஜபக்ஷே தலைமையில் 5 மந்திரிகள் குழுவும் வருகின்றனர்.

இந்த விமானத்தில் புத்தர் நினைவுச் சின்னங்களுக்கு என ஒரு தனி இருக்கை பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னங்களை இலங்கையின் வாஸ்கதுவா கோவில் மகாநாயகா தலைமையிலான 12 உறுப்பினர்கள் புனித நினைவுச்சின்னங்களை கொண்டு வருகின்றனர். உத்திர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இதை பெற்றுக் கொள்கிறார்.

மகாபரிநிர்வாண கோவிலில் அபிதம்ம தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்படி என்றால் புத்தர் தனது தாயாருக்கு அபிதம்மத்தை போதித்து விட்டு பூமிக்கு திரும்பிய நாள் ஆகுமாம். புத்த நினைவு சின்னங்களுக்கு பிரதமர் மோடி மிகுந்த மரியாதை செலுத்துகிறார். மோடியுடன் இந்த நிகழ்ச்சியில் இலங்கை, தாய்லாந்து, மியான்மர், தென்கொரியா, நேபாளம், பூடான், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் புகழ்பெற்ற புத்த மதத் துறவிகளும், பல்வேறு நாடுகளும் தூதர்களும் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் இங்கு பிரதமர் போதி மரக்கன்றையும் நடுகிறார். தற்போது இதன் காரணமாக குஷிநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleடி20 உலகக் கோப்பைத்தொடர்! வீரர்கள் தொடர்பாக விராட் கோலி தெரிவித்த தகவல்!
Next articleடி20 உலகக் கோப்பை..இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்.!!