குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது எப்போது? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

0
173

உலகம் முழுவதும் பரவி வரும் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது, இந்தியாவில் இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு சுமார் ஏழு மாதங்களில் 100 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி தடுப்பூசியை எழுதி இந்தியா இந்த சாதனையை படைத்திருக்கிறது, இந்த மாபெரும் சாதனைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தமிழ்நாடு தான் என்று சொன்னால் அது மிகையாகாது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் பல கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது தமிழக அரசு.

இந்த நிலையில், இந்தியாவில் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று தடுப்பூசி போடும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை இதனை முன்னிட்டு மத்திய அரசு சார்பாக தடுப்பூசி காண தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என் கே அரோரா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் இது தொடர்பாக தெரிவித்திருக்கின்றனர் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று தடுப்பூசி போடும் பணி அடுத்த வருடம் ஜனவரி மற்றும் மார்ச் உள்ளிட்ட காலகட்டத்தில் ஆரம்பமாகும். முதலில் இணை நோய் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்திருக்கிறார். குழந்தைகளுக்காக கோர்வே வேக்ஸ்,ஜைகோவ் டி, கோவாக்சின், உள்ளிட்ட 4 தடுப்பூசிகள் இந்த வருடம் முடிவதற்குள் வெளிவந்துவிடும் இவை குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தில் நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணியை விரிவான முறையில் மிகவும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு அம்சத்தையும் உறுதி செய்ய வேண்டியது நம்முடைய கடமையாகும் என தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி போதுமான விநியோகத்தையும், இருப்பையும், உறுதி செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது வேலையை முடிவு செய்ய வேண்டும் தேவைப்பட்டால் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். இதையெல்லாம் செய்து முடித்த பின்னர் தான் தடுப்பூசி போடும் பணியை ஆரம்பிக்க முடியும் அதோடு தடுப்பூசி போட வேண்டியவர்களின் பட்டியலும் தயாராகி வருகிறது. என்று அவர் கூறியிருக்கிறார்.

Previous articleமூன்றாம் பாலினத்தோருக்கு, போலீசார் எச்சரிக்கை
Next articleகோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்!