காதலை மறுத்த பெண் படுகொலை! ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்! விஷம் குடித்து தனது முடிவை தேடிய தமிழக நபர்!

Photo of author

By Hasini

காதலை மறுத்த பெண் படுகொலை! ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்! விஷம் குடித்து தனது முடிவை தேடிய தமிழக நபர்!

உத்தர கன்னடா மாவட்டத்தில் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இந்தப் பெண் பெங்களூர் புறநகர் மாவட்டம் உள்ள ஓசக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதன் காரணமாக அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் பாலகிருஷ்ணா என்ற 30 வயது தமிழ் நாட்டை சேர்ந்த நபரும் வேலை செய்து வந்ததால் முதலில் நண்பர்களாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் உஷாவை கோபாலகிருஷ்ணன் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் உஷாவிடம் தனது காதலை தெரியப்படுத்தினார். அப்போது உஷா கோபால கிருஷ்ணனின் காதலை ஏற்க மறுத்து விட்டு, தான் ஏற்கனவே வேறு ஒருவரை காதலிப்பதாகவும், அதனால் என்னை நீ தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும் அவ்வப்போது உஷாவிடம் அவர், அந்த காதலை கைவிட்டு விட்டு என்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் மல்லசந்திரா கிராமம் அருகே உஷாவை கோபாலகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது மீண்டும் அவர் தன்னை காதலிக்கும்படி உஷாவை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு உஷா எதிர்ப்பு தெரிவித்ததோடு, கோபால கிருஷ்ணாவை கடுமையாக எச்சரித்து, கண்டித்துள்ளார். அதில் கடும் கோபம் ஏற்பட்டு கோபாலகிருஷ்ணன் உஷாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பின் தான் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த கத்தியால் வெறி கொண்டு  குத்திக் கொன்றார்.

இதில் பலத்த காயம் அடைந்த உஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடி, கெத்துலாபுரா என்ற கிராமத்திற்குச் சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர் வாங்கி வைத்த விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எனவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உஷா மற்றும் கோபாலகிருஷ்ணனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்பு போலீசார் நடத்திய விசாரணையின் மூலம் ஒருதலை காதலால் தான் கோபாலகிருஷ்ணன் அப்படி படுகொலை செய்து இருந்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து இது பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.