போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!!
அனைத்து இடங்களிலும் எவ்வளவு கண்டிப்பாக போலீசார் பரிசோதனை மேற்கொண்டாலும், இந்த போதை பொருள் ஆசாமிகள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பி வந்து மக்களுக்கு கேடு தரும் போதை பொருட்களை விற்று பணம் பார்க்கின்றனர்.
அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு என்ற மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றதாக அஜந்தி தேவி என்ற பெண்ணை, அவரது மூன்று கூட்டாளிகளுடன் போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிறையில் அடைப்பதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அஜந்தி தேவி பலமு மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அந்தப் பெண் அந்த முகாமில் இருந்து தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய அஜந்தி தேவியை மீண்டும் கைது செய்ய தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.