ஒரே மாதத்தில் 426 மாணவர்களுக்கு கொரோனா! அச்சத்தில் உலகம்!
கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாகவே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருமே வீட்டிலிருந்தே படிப்பை தொடர்ந்து வருகின்றனர். உலகமே ஸ்தம்பித்தது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போட்டதன் விளைவாக எல்லா இடங்களிலும், எல்லா மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பதை குறித்து ஆலோசனைகள் செய்து, தற்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதன் பின்னரே பள்ளிகளை திறக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
பள்ளிக்கு வருபவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் என்றும் அரசாணை பிறப்பித்தாது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் கடந்த செப்டம்பர் 27ம் தேதிதான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
அரசு குறிப்பிட்ட நெறிமுறைகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறந்து ஒரு மாதமே ஆன நேரத்தில் காங்ரா என்ற மாவட்டத்தில் மட்டும் 426 மாணவர்கள் மற்றும் நாற்பத்தி ஒன்பது பள்ளி பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த மாநிலத்தில் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.